Take a fresh look at your lifestyle.

மத்திய பெட்ரோலியத் துறையின் அண்மைய அறிவிப்பால் வணிக ரீதியிலான எரிவாயு (LPG) விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள

101

மத்திய பெட்ரோலியத் துறையின் அண்மைய அறிவிப்பால் வணிக ரீதியிலான எரிவாயு (LPG) விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை ஹோட்டல்கள் சங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. மேற்கு ஆசியப் பதற்றங்களால் எரிபொருள் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக, தற்போது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகம் சென்னை, கோவை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் தலைவர் எம். ரவி கையெழுத்திட்டுள்ள இந்தக் கடிதத்தில், பெரும்பாலான ஹோட்டல்களில் இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே எரிவாயு இருப்பு இருப்பதாகவும், விநியோகம் சீராகாவிட்டால் உணவகங்களை மூட வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், ஐடி பூங்காக்கள், விடுதிகள் மற்றும் ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கும் அத்தியாவசியப் பணியில் உணவகங்கள் ஈடுபட்டுள்ளதைக் கருத்தில்கொண்டு, வணிக எரிவாயுவை ‘அத்தியாவசியப் பொருளாக’ வகைப்படுத்தித் தடையின்றி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது