Take a fresh look at your lifestyle.

விஜய்க்கு “ஏஎஸ்பி காமராஜ்” பட இயக்குநர் கோரிக்கை

58

விஜய்க்கு “ஏஎஸ்பி காமராஜ்” பட இயக்குநர் கோரிக்கை
இயக்குநர் ஏ.ஜெ. பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான காமராஜர் ஆவணப்படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்திலும் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருக்குறள் படத்தையும் இயக்குனர் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். அந்த படமும் குறிப்பிட்டு சொல்லும் படியாக பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் காமராஜர் ஆவணப்படம் மற்றும் திருக்குறள் படத்தின் இரண்டாம் பாகத்தின் மாதிரி காட்சி வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குநர் பாலகிருஷ்ணன் பேசியது, இந்த விழாவில் தமிழக முதலமைச்சரிடம் நான் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறேன். காமராஜர் திரைப்படத்தை அரசுடமையாக்க வேண்டும். அந்தப் படத்தின் டிவி வெளியீட்டு உரிமை உள்ளிட்ட பல உரிமைகள் இதுவரை விற்கப்படவில்லை.தற்போது அது யூடியூபில் மட்டுமே உள்ளது. எனவே அந்தப் படத்தை அரசு வாங்கி, அதற்கான உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளேன்.