மருத்துவத்துறைக்கான அறிவிப்புகள்
பெரம்பூரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும். முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு.தமிழ்நாட்டில் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும். ரூ.677 கோடியில் முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம் உருவாக்கப்படும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்படும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ.351 கோடியில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும் சட்டப்பேரவையில் மருத்துவத்துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்