Take a fresh look at your lifestyle.

நாகார்ஜுனாவின் ‘கிங் 100 பட கிளிம்ப்ஸ்

26

நாகார்ஜுனாவின் ‘கிங் 100 பட கிளிம்ப்ஸ்
‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ர.கார்த்திக் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாவின் நூறாவது திரைப்படமாக உருவாகி வரும் ‘கிங் 100 திரைப்படத்தின் பிரத்யேக க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் அக்கினேனி குடும்பத்தினர் தயாரிக்கின்றனர். நாகார்ஜுனாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. அதோடு வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.