தமிழகத்தில் தவெக ஆட்சியில் பொருளாதார வீழ்ச்சியடைந்து, அதல பாதாளத்திற்கு சென்று விட்ட நிலையில் சமூக வலைதள ஆட்சியாக மட்டுமே நடப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பொள்ளாச்சியில் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பொள்ளாச்சிக்கு வருகை தந்து காந்தி ஜெயந்தியையொட்டி காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் பேசியபோது., பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க இந்த உலகத்தில் இனி ஒருவர் பிறந்து தான் வரவேண்டும், பிரதமர் மோடி 13 ஆண்டுகள் குஜராத்தின் முதல்வராக இருந்தார் என்றும், 12 ஆண்டுகளை தாண்டி பிரதமராக மோடி வீரநடை போடும் மாபெரும் தலைவராக இருக்கிறார் என்றும், தமிழ்நாட்டில் வேண்டுமானாலும் பாஜக இல்லாமல் இருக்கலாம், ஆனால் இனி வரும் காலங்களில், கால் மட்டும் அல்ல, முழு அதிகாரத்தையும் தமிழகத்தில் பதிக்கும் என அமைச்சர் ஆதவா அர்ஜுனாவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் தேவையில்லாத தேர்தல் என்றும், தேர்தல் முடிந்து எம்எல்ஏ பதவி ஏற்ற பின்னர் ராஜனமா செய்திருப்பது குதிரை பேரம் தான், இதற்கு முழு பொறுப்பு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தான் என்றும், குதிரை பேரன் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும்,தவெக ஆட்சியின் 144 நாட்களில் நடந்த 500 குற்றங்களில் 30 பேர் கற்பழிப்பு குற்றத்தில் தவெகவினர் உள்ளனர் என்றும், ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார். முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு மக்களை பற்றி சிந்திக்க கூடிய எண்ணம் இல்லை என்றும், தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு மின்வெட்டு அதிகரித்துள்ளதால் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மக்களுக்கான திட்டங்கள் ஏதும் இல்லாமல் மக்கள் சார்ந்த ஆட்சி இல்லை என்றும், தமிழகத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு அதல பாதளத்தில் சென்று கொண்டிருப்பதால் சமூக வலைதள ஆட்சியர்தான் தமிழகத்தில் நடைபெற்று வருவதாக நயினார் நாகேந்திரன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.