Take a fresh look at your lifestyle.

சென்னையில் மகளிர் கட்டணமில்லா பேருந்தில் கட்டணம் வசூலித்ததாக புகார்

6

சென்னையில் மகளிர் கட்டணமில்லா பேருந்தில் கட்டணம் வசூலித்ததாக புகார்

சென்னையில் இயக்கப்பட்ட மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் கட்டணம் வசூலித்து டிக்கெட் வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டணம் வசூலிக்கப்பட்டதையடுத்து, “டிக்கெட் காட்டுங்க… காசு ரிட்டன் வாங்குங்க” என பெண் நடத்துனரிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. சம்பவம் குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.