Take a fresh look at your lifestyle.

சாண்டலுட்டை அதிர விட்ட ரச்சிதா ராம்

1

சாண்டலுட்டை அதிர விட்ட ரச்சிதா ராம்

கன்னட திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ரச்சிதா ராம் . ரஜினி நடித்த கூலி படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். ஹீரோவுக்கு இணையாக கர்நாடகாவில் ஏராளமான ரசிகர்களை வைத்துள்ள ரச்சிதாராம் நேற்று முன்தினம் தனது 34-வது பிறந்தநாளை ரசிகர்கள் புடைசூழ நள்ளிரவு கொண்டாடி அசத்தார். பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரமாண்ட கட் அவுட்கள் வைத்து பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர். அப்போது அங்கு திரண்டு இருந்த ரசிகர்களை நேரில் சந்தித்தார்.ரசிகர்கள் நீண்ட வரிசையில்நின்று ஒவ்வொருவராக அவருடன் செல்பி எடுத்தபடி சென்றனர். அப்போது ரசிகர் ஒருவர் செல்பி எடுத்து முடிந்ததும் யாரும் எதிர்பாராத வகையில் ரச்சிதா ராமின் இரண்டு கன்னத்தையும் பிடித்து கிள்ளி கொஞ்சி மகிழ்ந்தார். இதனால் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த ரச்சிதாசாம் ரசிகரின் அன்பை நினைத்து புன்னகைத்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹீரோக்களுக்கு இணையாக பிரம்மாண்ட பிறந்தநாள் விழா நடத்தி சாண்டலுட்டை அதிர வைத்துள்ளார்.