Take a fresh look at your lifestyle.

புதுக்கோட்டை மேட்டுப்பட்டி அருகே 6 மாத கர்ப்பிணி கழுத்து நெரித்து கொலை: மாமியார், நாத்தனார் உட்பட 6 பேர் கைது!

6

புதுக்கோட்டை மேட்டுப்பட்டி அருகே 6 மாத கர்ப்பிணி கழுத்து நெரித்து கொலை: மாமியார், நாத்தனார் உட்பட 6 பேர் கைது!

புதுக்கோட்டை மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சந்தியா (21) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், சந்தியா தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

கடந்த 29-ஆம் தேதி பாண்டித்துரை பணி நிமித்தமாக ஈரோட்டிற்குச் சென்றுவிட்டார். மறுநாள் சந்தியாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவரது கணவர் குடும்பத்தினர் அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சந்தியா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, சந்தியாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே, சந்தியாவின் கழுத்தில் காயம் இருந்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவரது கணவரின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின:

நாத்தனார்களின் நடவடிக்கைகள் குறித்து தனது கணவரிடம் சந்தியா கூறியதால் ஆத்திரமடைந்த மாமியார் பானுமதி (46), நாத்தனார்கள் பாண்டிமீனா (33), பொற்கொடி (29),கணவரின் அத்தை கனிமொழி (27), மாமனாரின் சகோதரி செல்வி (38) மற்றும் அவரது மகன் கார்த்திக் (24)ஆகிய 6 பேரும் சேர்ந்து, சுடிதார் துப்பட்டாவினால் சந்தியாவின் கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தை மூடியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

பின்னர், பிரெட் சாப்பிடும்போது தும்மல் ஏற்பட்டு சந்தியா மயங்கி விழுந்துவிட்டதாக மருத்துவர்களிடம் கூறி நாடகமாடியதும் தெரியவந்தது. கர்ப்பிணி என்றும் பாராமல் சந்தியாவைக் கொடூரமாகக் கொலை செய்த கணவரின் குடும்பத்தைச் சேர்ந்த மாமியார், நாத்தனார் உட்பட 6 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.