Take a fresh look at your lifestyle.

அருள்நிதியின் ‘வேட்ட சாமி’ பர்ஸ்ட் லுக்

34

அருள்நிதியின் ‘வேட்ட சாமி’ பர்ஸ்ட் லுக்
7 மைல்ஸ் பர் செகண்ட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,எம். செல்வகுமார் இயக்கத்தில், அருள்நிதி, அமீர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘வேட்ட சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குனர்கள் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸை வெளியிட்டனர். இதில் ஹீரோயின் இல்லாமல் கதையையும் கதாபாத்திரங்களையும் மையப்படுத்தி இயக்குனர் உருவாகியுள்ளார்.நெல்லை மாவட்ட பகுதியின் பெரும் காவல் தெய்வங்களான சங்கிலி பூதத்தார், சுடலை மாடன் உள்ளிட்ட குலதெய்வ வழிபாடுகளை மையப்படுத்தி இப்படத்தின் கதை அமைக் கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.