கோலிவுட்டை பிளாஸ்ட் பண்ணும் ப்ரீத்தி முகுந்தன் (அ) இளம் ஹீரோக்களின் ஃபேவரிட் ஹீரோயினான ப்ரீத்தி முகுந்தன்
கோலிவுட்டை பிளாஸ்ட் பண்ணும் ப்ரீத்தி முகுந்தன் (அ) இளம் ஹீரோக்களின் ஃபேவரிட் ஹீரோயினான ப்ரீத்தி முகுந்தன்
தமிழ் சினிமாவில் முந்தைய காலங்களில் தமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்த ஏராளமான கதாநாயகிகள், தங்களது அழகு, நடிப்பு, நடனம் என பல்வேறு திறமைகளால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர். ஆனால் அதன் பிறகு வெளி மாநில நடிகைகளின் வரவால் தமிழ் பேசும் நடிகைகளுக்கு வாய்ப்பு பறிபோனது. எல்லா படங்களிலும் மும்பை நடிகைகள் மற்றும் மலையாள நடிகைகள் இடம் பிடிக்கத் தொடங்கினார். ஆனால் தற்போது மீண்டும் தமிழ் நடிகைகளுக்கான கதவு திறக்கப்பட்டு உள்ளது.கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகள் பட்டியலை திரும்பிப் பார்த்தால் தமிழ் பேசும் நடிகைகள் கவனம் பெற்று வருகின்றனர், அந்த வகையில் தற்போது திருச்சியைச் சேர்ந்த பிரீத்தி முகுந்தன் கோலிவுட்டை அதிரவிட்டு வருகிறார். தனது அழகு மட்டுமின்றி நடிப்புத் திறமையாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ஆரம்பத்தில் புதுமுக நடிகையாக பார்க்கப்பட்ட ப்ரீத்தி முகுந்தன், ஸ்டார், பிளாஸ்ட், இதயம் முரளி படங்களின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வருகிறார். கடந்த 2ம் தேதி வெளியான அன்பில் அவன் படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. லவ் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் அசோக்செல்வனுடன் போட்டி போட்டு நடித்துள்ளார். அடுத்து தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கு கன்னடம் மலையாளம் என மற்றும் மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். கதாநாயகியாக அறிமுகமான உடனேயே பெரிய அளவில் கவனம் பெற்றுவிடுவது எல்லோருக்கும் அமைந்துவிடாது. ஒவ்வொரு படத்திலும் தன்னை நிரூபித்துக் கொண்டே செல்ல வேண்டும். அந்த வகையில், பிரீத்தி முகுந்தனின் திரைப்பயணம் விரைவில் அவரை தென்னிந்தியாவின் பிறந்த சிறந்த நடிகைகளில் ஒருவராக கொண்டு நிறுத்தும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
