Take a fresh look at your lifestyle.

சூரியன் தண்ணீர் கதை..; கண்ணீர் விட்ட தாய்!!

28

சூரியன் தண்ணீர் கதை..; கண்ணீர் விட்ட தாய்!!
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடித்துள்ள படம் மண்டாடி. ராமநாதபுரம் பகுதி மீனவர்களின் வாழ்க்கையும், படகு போட்டியையும் மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இதில் சத்யராஜ்,மகிமா நம்பியார்,சுகாஸ், மிதூன் ஜெய்சங்கர் உள் பட பலர் நடித்துள்ளனர்.ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, எல்ரெட் குமார் தயாரித்து ள்ளார். இந்த படம் வரும் 10-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் வெற்றிமாறன், ஆர்.ஜே. பாலாஜி, ரவிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவில் சூரி பேசும்போது, இந்த விழாவுக்கு வரும் போது என் அம்மா என் மகளிடம், ஒரு காலத்தில் அம்மா பசிக்குது ஒரு 300 ரூபாய் போட்டு விடு என்று அழுவான். ஆனால் இன்னைக்கு அவனுக்காக இவ்வளவு பேர் போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கிறார்கள் என்றார். அதன் பிறகு சூரியின் தாயார் பேசும் போது, “ஒருநாள் என் மகன் சூரி எனக்கு போன் செய்தான். அவனிடம் சாப்பிட்டாயா என கேட்டேன். இல்லை. குழாயில் தண்ணீரை திறந்து குடித்து விட்டு படுத்துவிட்டேன் என சொன்னான். ஆனால் இப்போது அவனை பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சி என கண்ணீர் மல்க கூறினார்.