Take a fresh look at your lifestyle.

நளினியை வியக்க வைத்த பிறந்தநாள் பரிசு

29

 

நளினியை வியக்க வைத்த பிறந்தநாள் பரிசு
டி.ராஜேந்தரின் ‘உயிருள்ளவரை உஷா’ படத்தில் அறிமுகமான நளினி, தொடர்ந்து பல படங்களில் நடித்து 80 களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய நளினி, டிவி சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற யூத் படத்தில் தலைமை ஆசிரியராக நடித்து கம் பேக் கொடுத்தார். இந்நிலையில் நளினியின் 62-வது பிறந்தநாளை யொட்டி அவரது தம்பி, அவருக்கு 62 புடவைகளை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். நளினிக்கு புடவை என்றால் தனி பிரியம். ஒரு முறை கட்டிய புடவையை அவர் திரும்ப கட்டுவதில்லை. தினமும் புதுப் புடவைதான் அணிவார். புடவை வைப்பதற்கு என்று தனி வீடே வைத்துள்ளார். நளினியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சமூக வலைதளங்க ளில்வைரலாகி வருகிறது.