Take a fresh look at your lifestyle.

செங்கோட்டை அருகே சாலை விபத்து

2

செங்கோட்டை அருகே சாலை விபத்து

செங்கோட்டை அருகே உள்ள கட்டளை குடியிருப்பு அரசடி அம்மன் கோவில் அருகே இன்று கார் டயர் வெடித்து மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. ராஜபாளையத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார், திடீரென டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து, எர்ணாகுளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதியது. இந்த விபத்தில் தூத்துக்குடி நோக்கி சென்ற கார் சாலையில் இரண்டு முறை உருண்டு விபத்துக்குள்ளானது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த புளியரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்