Take a fresh look at your lifestyle.

அமுதா கேரக்டர் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்: கயாடு லோஹர்

2

அமுதா கேரக்டர் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்: கயாடு லோஹர்
ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள ‘இதயம் முரளி’ படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. இதில் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் ஹீரோயினாக நடித்திருந்தனர்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து படத்தின் வெற்றிவிழா நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட னர்.அதில் கயாடு லோஹர் பேசியது, “இதயம் முரளி என்னுடைய முதல் தமிழ் படமாக சைன் பண்ணேன். அதனால் இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். நீங்க எல்லாரும் எனக்கு கொடுத்திருக் கிற லவ் மற்றும் சப்போர்ட் ரொம்ப பெரிதாக இருக்கு. அமுதா கேரக்டர் என் மனசுக்கு ரொம்ப ஸ்பெஷல். அவளோட இன்னசன்ட், ஸ்ட்ரெந்த், எமோஷன் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றார்