Take a fresh look at your lifestyle.

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி பங்கேற்ற கால்பந்து விழா

1

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி பங்கேற்ற கால்பந்து விழா தொடர்பான குளறுபடி வழக்கில், மேற்கு வங்கத்தின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸுக்கு போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

முன்னதாக அனுப்பப்பட்ட இரண்டு சம்மன்களுக்கும் அவர் ஆஜராகாத நிலையில், 48 மணி நேரத்திற்குள் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், நிகழ்ச்சி ஏற்பாடுகள் மற்றும் நிதி முறைகேடுகள் குறித்த பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.