ஆக.1 முதல் தட்கல் ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்கு டோக்கன்!
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு கவுண்ட்டர்களில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் டோக்கன் முறை அறிமுகம். நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், குறிப்பிட்ட நேரத்தில் வந்து டிக்கெட் பெற ஏற்பாடு. AC தட்கல் முன்பதிவுகளுக்கு ஆரம்பத்தில் 10 டோக்கன்கள், AC அல்லாத தட்கல் முன்பதிவுகளுக்கு 15 டோக்கன்களும் வழங்கப்படும். ஏசி தட்கல் டோக்கன்கள் காலை 8:30 மணி முதல் 9:00 மணி வரையும், ஏசி அல்லாத தட்கல் டோக்கன்கள் காலை 9:00 மணி முதல் 9:30 வரையும் வழங்கப்படும்.