ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசளித்த தனுஷ்
இந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் வரை கால் பதித்த நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது, நண்பர்கள் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்த மாபெரும் ரத்ததான முகாம் கடந்த 26ம் தேதி வேல்ஸ்மருத்துவமனை மற்றும் கல்லூரிவளாகத்தில் நடந்தது.இதில் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏழை எளிய மாணவர்கள் 150 பேருக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் 30 மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை குடும்பத்திற்கு 30 ஆட்டோவை தனுஷ் வழங்கினார்.
Prev Post