Take a fresh look at your lifestyle.

ஒரு சிலிண்டர் வாங்கியபின் மற்றொரு சிலிண்டர் வாங்க 25 நாட்கள் கால இடைவேளை அறிவிப்பு.

103

ஒரு சிலிண்டர் வாங்கியபின் மற்றொரு சிலிண்டர் வாங்க 25 நாட்கள் கால இடைவேளை அறிவிப்பு.

ஒரு வீட்டு உபயோக சிலிண்டர் வாங்கியபின் மற்றொரு சிலிண்டர் வாங்குவதற்கான கால இடைவெளியை 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்த்தியது மத்திய அரசு.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில் சிலிண்டர்களை பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பதை தவிர்க்க நடவடிக்கை.

சென்னையில் நிலவி வரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல் ஆனந்தா நிர்வாகம் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது; நாள் ஒன்றுக்கு 10 சிலிண்டர்கள் தேவைப்படும் நிலையில், இன்று ஒரு சிலிண்டர் கூட கிடைக்காததால் மதிய உணவில் வெரைட்டி ரைஸ் உள்ளிட்ட பல பதார்த்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணிக்குத் திறக்க வேண்டிய உணவகம் ஒரு மணி நேரம் தாமதமாக 7 மணிக்குத் திறக்கப்பட்ட நிலையில், இன்று ஒரு நாள் மட்டுமே சமாளிக்க முடியும் என்றும், நாளை முதல் சமையல் பணிகளைத் தொடர முடியாது என்றும் ஹோட்டல் மேற்பார்வையாளர் நாராயணன் கவலையுடன் தெரிவித்துள்ளார். எரிவாயு விநியோகம் இல்லை என்ற தகவல் வெறும் 2 மணி நேரத்திற்கு முன்புதான் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், இதனால் இன்று மதிய உணவிற்கு ஒரே ஒரு வகை சாம்பார் மற்றும் குருமா மட்டுமே வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.