Take a fresh look at your lifestyle.

🚆🏔️ நம்ம மேட்டுப்பாளையத்தில் சொந்த வீட்டில் வாழ்வதற்கான உரிமை தொழிலாளர்களுக்கும் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் !”

103

🚆🏔️ நம்ம மேட்டுப்பாளையத்தில் சொந்த வீட்டில்
வாழ்வதற்கான உரிமை தொழிலாளர்களுக்கும் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் !”

இந்தியா சுதந்திரம் பெற்றது 1947 ஆம் ஆண்டு. பல தசாப்தங்கள் கடந்தும் இன்று கூட லட்சக்கணக்கான தொழிலாளர்கள் “நமக்கென்று ஒரு சொந்த வீடு கூட இல்லையே!” என்ற வேதனையுடன் விரும்பி கண்ணீர் வடித்து வாழ்ந்து வருகின்றனர்.

இன்றைய பொருளாதார சூழ்நிலையில், தினக்கூலி மற்றும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வாடகை வீட்டின் வாடகை கூட கட்ட முடியாத வேதனையில் வருமானம் குறைவாக இருப்பதால்
குடும்பம் நடத்துவதற்கே கடினமாக இருக்கும் நிலையில் சொந்த வீடு என்பது பலருக்கும் கனவாகவே மாறியுள்ளது.

மேட்டுப்பாளையம் தாலுக்கா பகுதியில் எக்டர் கணக்கில் அரசு இடங்கள் தனியார் வசம் உள்ளது அதை முறையாக கணக்கெடுத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்

உண்ண உணவு, வாழ இடம், தரமான கல்வி, மனிதனுக்கு மரியாதையான வாழ்க்கை — இவை அனைத்தும் இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்த அடிப்படை உரிமைகள்.

அதிலும் குறிப்பாக வாழ்வதற்கான உரிமை (Article 21) என்பது மனிதன் மரியாதையுடன் வாழும் உரிமையை உறுதி செய்கிறது. அதற்கான முக்கியமான அடிப்படை ஒரு பாதுகாப்பான வீடு.
ஆனால் இன்று

இரவு பகல் பாராமல் உழைக்கும் தொழிலாளர்கள்:அடிக்கடி வாடகை வீடுகளில் முகவரி மாறி வாழ வேண்டிய நிலை

குழந்தைகள் பள்ளியில் சேர்க்கும்போது நிலையான முகவரி இல்லாத அவலம்
விடுப்பு எடுத்துக்கொண்டு ஆதார் அட்டையில் முகவரி மாற்றவும்
குடும்ப அட்டையில் முகவரி மாற்றவும் வருடத்திற்கு ஒருமுறை அரசு அலுவலகங்களில் வரிசையில் நிற்க வேண்டிய அவல நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.

சொந்த வீட்டுக்காரர்கள்
எப்போது வெளியேற சொல்லுவார்கள் என்ற நிலையற்ற நாடோடி வாழ்க்கைகள்

நாங்கள் மாடமாளிகை கேட்கவில்லை…
எங்கள் குழந்தைகளுக்கு ஒரு சிறிய சொந்த வீட்டு மனை மட்டும் தான் கேட்கிறோம்.
நாம் மக்களுக்கு என்ன தேவை என்று அரசு அதிகாரிகள் தானாக வந்து கேட்பதில்லை.
நாம் தான் நேரடியாக சென்று அரசிடம் மனு கொடுத்து நமது உரிமைகளை கேட்க வேண்டும்.

அந்த உரிமையை வலியுறுத்தி
Centre of Indian Trade Unions (CITU)
மேட்டுப்பாளையம் தாலுக்கா பொது தொழிலாளர் சங்கம் சார்பில்

வீட்டுமனை கேட்டு குடியேறும் போராட்டம்

12.03.2026 – வியாழக்கிழமை
காலை 10 மணி
மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் சிறுமுகை ரோடு*

ஏற்கனவே CITU தொழிற்சங்கம் சார்பில் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
மேட்டுப்பாளையம் சுற்றுப்பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை அடையாளம் காட்டியும் எளிய தொழிலாளர்களுக்கு வீட்டு மனை வழங்க கோரியும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டிக்கிறோம்!

மேட்டுப்பாளையம் சுற்றுப்பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை அளவீடு செய்து

எளிய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும்

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே இந்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்
என்று வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெறுகிறது
.
பல ஆண்டுகளாக வீடு இல்லையே என்று ஏங்கித் தவிக்கும்
தொழிலாளர்களின் வாழ்வுரிமைக்கான இந்த போராட்டத்தில்
அனைவரும் பங்கேற்று ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.

📞 தொடர்புக்கு👇

9659433628
9965932394
9715799929
7845240825
80727 91809

ஒரு சொந்த வீடு – ஒரு குடும்பத்தின் நமது குழந்தைகளின் அடையாளம்!

தொழிலாளர்களுக்கும் மரியாதையுடன் இந்த சமூகத்தில் சொந்த வீட்டில் உரிமை வேண்டும்! உரிமை கேட்டு ஜனநாயக போராட்டத்திற்கு அணி திரள்வோம்🙏