Take a fresh look at your lifestyle.

தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்க போகும் த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?

10

தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்க போகும் த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?

2026 -2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. அடுத்த மாதம் தொடக்கத்தில் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி காலை 10 மணிக்கு சட்ட சபை கூட்டம் தொடங்குகிறது. முதல் நாளில் 2026- 27 – ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் மரியம் வில்சன் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அம்சங்களை பட்டியலிட்டு அறிவித்து பேசுவார். அடுத்த நாள் 2026 – 27 – ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் துறை அமைச்சர் வினோத் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார். தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதில் வரையும் இடம் பெறும். அதன் பின்னர் துறைவாரியாக மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறும். மொத்தத்தில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமார் ஒன்றரை மாதங்கள் நடைபெறும் என்று தெரிகிறது.தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று மக்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

த.வெ.க தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 2,500 வழங்கப்படும். ஆண்டுக்கு 6 இலவச எல்.பி.ஜி.சிலிண்டர்கள்வழங்கப்படும். திருமணத்திற்கு 1சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கப்படும். ரூ. 20 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும். குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும். ஆண்டு தோறும் இலவச முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தோறும் ரூ.4000 வழங்க கப்படும் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெறும் என்று தெரிகிறது. ஏற்கனவே த.வெ.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 – ம் தேதி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இதேபோன்று தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற 200 யூனிட் மின்சாரம் ஒரு மாதம் வழங்கப்பட்டுள்ளது. ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அறிவிப்புகளில் முக்கியமானவை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பட்ஜெட்டில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை ரூ. 2,500 ஆக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை பெண்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் கடந்த சில நாட்களாக முதல்வர் ஜோசப் விஜய் துறைவாரியாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதனை தொடர்ந்து கடந்த 16 – ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது .இக்கூட்டத்தில் துறை ரீதியாக செய்யப்படும் மாற்றங்கள் குறித்தும், பட்ஜெட் அறிக்கையை இறுதி செய்வது குறித்தும் முதல்வர் ஜோசப் விஜய் ஆலோசனை நடத்தினார். த.வெ‌.க அரசின் முதல் பட்ஜெட் முத்தான மகிழ்ச்சி தரப்போகும் பட்ஜெட்டாக இருக்குமா என்பது சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே தெரியவரும்.