Take a fresh look at your lifestyle.

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன்

7

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன்
நடிகர், இயக்குநராக இருக்கும் பிரதீப் ரங்கநாதன் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.கோமாளி படத்தின் மூலம இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தின் மூலம் நடிகராகவும் புகழ்பெற்றார். அடுத்தடுத்து வெளியான டிராகன், டியூட் ஆகிய படங்கள் ஹிட் அடித்ததால் தற்போது முன்னணி நடிகராக மாறியுள்ளார். இயக்குனராகவும், நடிகராகவும் வெற்றி பெற்ற பிரதிப் ரங்கநாதன் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். பி ஆர் ஷோ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ள பிரதீப் ரங்கநாதன், முதல் தயாரிப்பாக அவரிடம் உதவி இயக்குனராக இருந்த 6 பேர் தி ஆல்பா யூனிட் என்ற பெயரில் படத்தை இயக்குகின்றனர். இதில் மம்தா பைஜு, அஸ்வத் மாரிமுத்து,சுவாசிக்க, அனாமிகா மகி, சிவாஜி சொன்டினேனி, லிசி ஆண்டனி உட்பட பலர் நடிக்கின்றனர்.படத்திற்கு தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, சாய் அபயங்கர் இசை அமைக்கிறார் .