Take a fresh look at your lifestyle.

நைட் ஷூட்டில் பங்கேற்கும் நயன்தாரா

5

நைட் ஷூட்டில் பங்கேற்கும் நயன்தாரா
சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா தற்போது ராகவா லாரன்ஸ் தயாரித்து இயக்கி நடித்துவரும் காஞ்சனா 4 படத்தில் நடித்து வருகிறார்.இதன் முதல் கட்ட ஷூட்டிங் 130 நாட்கள் தொடர்ந்து நடந்து முடிந்துள்ளது. இப்போது 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே நயன்தாரா இரவு நேர படப்பிடிப்பில் கலந்து கொள்வதில்லை. தனது இரட்டை குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே மாலை 6 மணிக்கு பிறகு அவர் ஷூட்டிங்கிலும் பங்கேற்க மாட்டார். ஆனால் தற்போது குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டதால் இரவு நேரம் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் காஞ்சனா 4 பேய் கதை படம் என்பதால் இரவில் தான் அதுசார்ந்த காட்சிகளை எடுக்க முடியும் என்பதால் இரவு நேரத்தில் ஷூட்டிங் நடக்கிறது. அதில் ஆர்வமுடன் நயன்தாரா பங்கேற்று நடித்து வருகிறார்.