பறை இசைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்: தேவா
எஸ்.விஜய் சுகுமார் இயக்கியுள்ள படம்
‘மாண்புமிகு பறை’. இதில் பறை இசை கலைஞராக லியோ சிவகுமார் நடிக்க, அவரு க்கு ஜோடியாக காயத்ரி ரீமா நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு தேவா இசையமைத்துள்ளார். பட அனுபவம் குறித்து தேவா கூறியது,‘மாண்புமிகு பறை’ என்ற டைட்டிலைக் கேட்டதும் பெருமையாக இருந்தது. இயக்குனருக்கு இது முதல் படம் போல் தெரியவில்லை. அந்த அளவுக்கு நேர்த்தியாக படத்தை எடுத்திருந்தார். இதில் பறை இசையின் பெருமையை சொல்லும் ஒரு பாடலை சினேகன் எழுதியுள்ளார்.
பாடல் பதிவு செய்யப்பட்ட பிறகு அந்த பாடலை நானே பாடி இருக்கலாமே என வருத்தப்பட்டேன். அந்த அளவுக்கு பாடல் சிறப்பாக வந்துள்ளது. எனக்கு தேசிய விருது கிடைக்காதது பற்றி வருத்தமில்லை. நான் என் கடமையை செய்து வருகிறேன்.
நமது பாரம்பரிய இசையான பறை இசைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றார்.
Prev Post
Next Post