சந்தோஷ் பிரதாப், பூஜிதா நடிக்கும் ‘சிக்னல் அட் 11.30′
சிவானி தயாரிப்பில் மலர்விழி நடேசன் இயக்கியுள்ள படம் ‘சிக்னல் அட் 11.30’ .இந்தப்படத்தில் சந்தோஷ் பிரதாப் ஹீரோவாக நடித்த,பூஜிதா மற்றும் பவ்யாதிரிகா ஹீரோயின் ஆக நடிக்கின்றனர். மேலும் முனிஸ்காந்த்,ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ள இந்த படம் பற்றி இயக்குனர் மலர்விழி நடேசன் கூறியது,”சோழிங்கநல்லூரில் ஒரு போக்குவரத்து சிக்னலில் இரவு 11.30 மணிக்கு நின்ற சமயம் யோசித்த கதை தான் ‘சிக்னல் அட் 11.30’. ஒரு தனி மனிதனின் வாழ்வில் நடக்கும் ஒரு சம்பவம், அவனது வாழ்க்கையையே புரட்டி போடுகிறது. அது என்ன? என்பது தான் ரொமான்ஸ், திரில்லர் ரகத்தில் எடுத்துள்ளேன். நான் சினிமாவில் முதலில் தயாரிப்பாளர் என்ற போர்வையில் தான் நுழைந்தேன்.ஆனால் காலம் என்னை இயக்குனராக மாற்றி விட்டது. நான் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்ற வில்லை. ஆனால் இந்த படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றார்.