குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி சினிமாவுக்கு வந்த பாக்கியஸ்ரீ போஸ்
துல்கர் சல்மானுடன் ‘காந்தா’ படத்தில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் பாக்கியஸ்ரீ போர்ஸ். தற்போது சிவகார்த்திகேய னுடன் சேயோன் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியது, நான் சினிமாவில் நடிப்பதற்கு முடிவு எடுத்ததும் என் குடும்பத்தில் ஒருவர் கூட சம்மதிக்கவில்லை. முதலில் அம்மாவிடம் சொன்னேன். அவர் மறுத்து விட்டார். அடுத்தது அப்பாவும் மறுத்துவிட்டார்.என் சகோதரி யாவது ஏற்றுக் கொள்வார் என்று பார்த்தால் அவரும் மறுத்தார். திரை உலகம் மகளுக்கு பாதுகாப்பாக இருக்காது என்று பெற்றோர் நினைத்தனர். குடும்பத்தினர் எதிர்ப்பை கடந்து சினிமாவில் நடித்தேன். வாழ்க்கையில் யாருக்கும் குற்ற உணர்ச்சி இருக்க கூடாது. உங்களுக்கு என்ன செய்ய தோன்றுகிறதோ அதை செய்யுங்கள்.நான் முதன் முதலாக ஆடிஷனுக்கு சென்ற போது என் அம்மா என்னை வாட்ஸ்அப்பில் பிளாக் செய்து விட்டார். 6 மாதம் அவர் என்னிடம் பேசவே இல்லை என்றார்.