Take a fresh look at your lifestyle.

டிரோல்களுக்கு பதில் சொல்லாதீங்க: அல்லு அர்ஜுன் அதிரடி பேச்சு

1

டிரோல்களுக்கு பதில் சொல்லாதீங்க: அல்லு அர்ஜுன் அதிரடி பேச்சு
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் ஐதராபாத்தில் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அவர் பேசும் போது, ‘உங்களோடு இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் இந்த உற்சாகத்தை இழக்காதீர்கள். இதை என் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, என்னை வெறுப்பவர்களுக்கும் சொல்லிக் கொள்கி றேன்.நம்மை பிடிக்காதவர்களுக்காக நேரத்தை செலவிடாதீர்கள். சோசியல் மீடியாவில் எழுந்து வரும் டிரோல்களுக்கு பதிலாக அந்த நேரத்தை உங்கள் சொந்த வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள்.உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த பெண்ணின் முன் அமருங்கள். அவர் வீட்டு முன்பு போய் நில்லுங்கள். ஒரு போதும் யாரையும் டிரோல் செய்யாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.அவரது இந்த பேச்சு வைரலாகி வருகிறது.நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு இலவச விபத்து காப்பீட்டை அறிவித்தார்.