Take a fresh look at your lifestyle.

விருதுகளை குவித்த வெள்ளகுதிர படம்

54

விருதுகளை குவித்த வெள்ளகுதிர படம்
சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’. நிஜம் சினிமா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம்
இம்மாத இறுதியில் வெளியாகிறது. இந்த நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பாக்கியராஜ், ஆர்.கே.செல்வமணி, தனஞ்செயன்,டி.சிவா, ஆர் வி உதயகுமார், பேரரசு,அஜயன் பாலா, குகன், நடிகர் விதார்த் மற்றும் தயாரிப்பாளர் ஜெயபிரகாசம் ஆகியோர் பங்கேற்றனர்.
இத்திரைப்படம் படம் சர்வதேச அளவில் 62 விழாக்களுக்கு நாமினேட் செய்யப்பட்டு, அதில் 54 விருதுகளை பெற்றுள்ளது. இதில் 26 சிறந்த நடிகருக்கான விருது, 23 சிறந்த படத்திற்க்கான விருது,6 சிறந்த தொழில் நுட்ப கலைஞருக்கான விருதையும் பெற்று சாதனை படைத்துள்ளது.