Take a fresh look at your lifestyle.

டிசம்பரில் ரஜினி படத்தில் ஷூட்டிங் துவக்கம்

30

டிசம்பரில் ரஜினி படத்தில் ஷூட்டிங் துவக்கம்
நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளார் .இந்த படம் ரஜினியின் 173-வது படமாகும். 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் ரிலீசாக உள்ளது. இதை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த புதிய படத்திற்கான துவக்க நிகழ்ச்சி கடந்த 5ம் தேதி பௌர்ணமி அன்று நடந்தது.இதில் கமல், ரஜினி, சுந்தர் சி மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் நிர்வாக அதிகாரி மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.இதை நேற்று அதிகாரப்பூர்வ மாக ஒரு வீடியோவுடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் டிசம்பர் மாதம் முதல் சூட்டிங் துவங்க உள்ளது.