Take a fresh look at your lifestyle.

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை… ஸ்ரீ கௌரி ப்ரியா அசத்தல் !!

2

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை… ஸ்ரீ கௌரி ப்ரியா அசத்தல் !!
தமிழில் மாடர்ன் லவ் ஸ்டோரி இணையத் தொடரில் அறிமுகமான நடிகை கௌரி ப்ரியா, லவ்வர் திரைப்படத்தின் மூலம் மிகவும் புகழ்பெற்றார். தற்போது, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.மாஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரவி வர்மா நம்பூரி இயக்கத்தில் சென்னை லவ் ஸ்டோரி என்ற படத்தில் ஸ்ரீ கௌரி ப்ரியா நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகனாக கிரண் அப்பாவரம் நடித்துள்ளார். இப்படம் நேற்று 24ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் வாரணம் ஆயிரம் படத்திலிருந்து ’நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ என்ற பாடலை தமிழ், தெலுங்கு மொழிகளில் பாடி அசத்தினார்.நடிகையாக இருக்கும் கௌரி ப்ரியா பாடலிலும் அசத்துவது ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.