Take a fresh look at your lifestyle.

மணிரத்தினம், விஜய் சேதுபதி படம் டேக் ஆப்

1

 

மணிரத்தினம், விஜய் சேதுபதி படம் டேக் ஆப்
தக் லைப் படத்துக்கு பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற செய்தி கடந்த சில மாதங்களாக உலா வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். இதில் ஹீரோயினாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நேற்று முதல் துவங்கியுள்ளது. இந்தப் படத்திற்காக கிளீன் ஷேவ் செய்யப்பட்ட முகத்துடன் விஜய் சேதுபதி கொல்கத்தா ஏர்போர்ட்டில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. எந்த வித அறிவிப்பும் இன்றி இந்த படத்தின் ஷூட்டிங்கை மணிரத்தினம் துவக்கி உள்ளார். விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் பட டைட்டிலும் வெளியாகும் என தெரிகிறது.