விஜய் ஆண்டனி பிறந்தநாளில் ‘அப்பா குட்டி’ பட செகண்ட் லுக்
விஜய் ஆண்டனியின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது, விஜய் ஆண்டனி மற்றும் ஒரு சிறுமிக்கு இடையிலான நெகிழ்ச்சியான தந்தை-மகள் பாசப் பிணைப்பை அழகாகப் படம் பிடித்துக் காட்டி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது.இயக்குநர் மு. மாறன் இயக்கியுள்ள இப்படம் அதிரடி காட்சிகள் நிறைந்த ஒரு ஆக்ஷன் ஃபேமிலி டிராமாவாக உருவாகியுள்ளது.இதில் பிரீத்தி அஸ்ரானி, பேபி லிதன்யா, பகவதி பெருமாள், ஹரிப்பிரியா இசை, அருவி மதன்குமார், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் திவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ், லிசி அந்தோணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Prev Post