Take a fresh look at your lifestyle.

பெடரேஷன் கப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி அறிவிப்பு

3

பெடரேஷன் கப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி அறிவிப்பு

அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்

சென்னை ஏப் 29:
தமிழ்நாடு லாக்ரோஸ் சங்கம் சார்பில், மே 10 முதல் 12 வரை ஹிமாசலபிரதேசத்தில் நடைபெற உள்ள பெடரேஷன் கப் 2026 போட்டியில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு ஆண்கள் மற்றும் பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது.

சென்னை கே.கே.நகரில் உள்ள தாய் சத்தியா மெட்ரிகுலேசன் பள்ளியில் இந்த அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு லாக்ரோஸ் சங்க தலைவர் டாக்டர் எம்.குமரன் கூறியது, ஹிமாசலபிரதேசத்தில் நடைபெற உள்ள பெடரேஷன் கப் 2026 போட்டியில் நாட்டில் உள்ள பல மாநிலங்களில் இருந்து வீரர்கள்,வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இந்தியாவில் வளர்ந்து வரும் விளையாட்டான லாக்ரோஸ் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக தமிழ்நாட்டில் இருந்து இதில் கலந்து கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி இன்று அறிமுகப்படுத்தப் பட்டது.அதோடு அவர்களுக்கான புதிய ஜெர்சி அறிமுக விழாவும் நடைபெற்றது.ஹிமாசலபிரதேசத்தில் நடைபெற உள்ள பெடரேஷன் கப் 2026 போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களில் இருந்து தேசிய அணி தேர்வு செய்யப்படும்.அப்படி தேர்வு செய்யப்படும் தேசிய அணி தான் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் இடம் பெறுவார்கள்.என்று தெரிவித்தார்.இந்த பத்திரிகையாளர் சந்திப்பில்,தமிழ்நாடு லாக்ரோஸ் சங்க செயலாளர் ஞானவேல், மாநில துணை தலைவர்கள் அனீஸ்நாத்,எஸ்.பாஸ்கரன்,என்.எஸ்.விஷேஷ் அலங், மாநில இணை செயலாளர் பி.சாக்ரடீஸ்,பத்மநாபன்,டேவிட்,சின்னா, சுரேஷ் விஜயகுமார் மற்றும் பயிற்சியாளர்கள் தவத்திருமணி, சாலமன், ராகுல், விஜயகுமார் ஆகியோருடன் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.