Take a fresh look at your lifestyle.

படப்பிடிப்பில் மயங்கு விழுந்த ரோபோ சங்கர்

49

படப்பிடிப்பில் மயங்கு விழுந்த ரோபோ சங்கர்
சென்னை, செப்.18:
நடிகர் ரோபோ சங்கர் சென்னையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு ஒன்றில் நடிகர் ரோபோ சங்கர்
பங்கேற்றார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.இதையடுத்து அவரை படக்குழுவினர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதித்தனர். ரோபோ சங்கரை பரிசோதித்தமருத்துவர்கள் நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சில தினங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தி யதன் பேரில் ரோபோ சங்கர் மருத்துவர்கள்
கண்காணிப்பில் இருக்கிறார்.இது குறித்து அவரது மனைவி கூறுகையில், ‘தொடர் படப்பிடிப்பு காரணமாக குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால்
மருத்துவமனையில் 2 நாட்கள் தங்கி
இருந்து சிகிச்சை பெற டாக்டர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர் என்றார்.
ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்தார். மீண்டும் தற்போது உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் ரோபோ சங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.