Take a fresh look at your lifestyle.

கமலுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பது எப்போது: ரஜினி பேட்டி

47

கமலுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பது எப்போது: ரஜினி பேட்டி
ரஜினி, கமல் இருவரும் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சேர்ந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை சமீபத்தில் துபாயில் நடந்த சைமா விருது விழாவில் நடிகர் கமல் உறுதிப்படுத்தினார். இந்த நிலையில் சென்னை ஏர்போர்ட்டில் நேற்று ரஜினி அளித்த பேட்டியில் கூறியது:-
கேள்வி:- நீங்களும் கமலும் மீண்டும் இணைந்து நடிக்க போகிறீர்களா? ரொம்ப வருடத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிப்பது எவ்வளவு மகிழ்ச்சியாக
இருக்கிறது?
பதில்:- இரண்டு பேரும் சேர்ந்து நடிப்பதற்கு
ஆசை. அதற்கேற்ற கதை கதாபாத்திரம்
கிடைக்க வேண்டும். கிடைத்தால் அவருடன் இணைந்து நிச்சயம் நடிப்பேன். அதற்கான திட்டம் உள்ளது. இன்னும் கதை, டைரக்டர் தேர்வு செய்யப்படவில்லை. அடுத்ததாக ராஜ்கமல், ரெட் ஜெயண்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் சேர்த்து படம் பண்ண போகிறேன். இன்னும் டைரக்டர் முடிவு செய்யப்படவில்லை என்று ரஜினி கூறினார்.