ஆங்கில சிறுகதை தொடரில் நடிக்கும் சித்தார்த்
‘சித்தா’ மற்றும் ‘3பிஎச்கே’ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சித்தார்த், தற்போது அமெரிக்க கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஜும்பா லஹரியின் மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்றான ‘Unaccustomed Earth’ என்ற தொடரில் நடித்துள்ளார். கேம்பிரிட்ஜில் இந்திய- அமெரிக்க சமூகத்திற்குள் அமைக்கப்பட்ட இந்தத் தொடர் காதல், ஆசை, அடையாளம், எதிர்பார்ப்பு, கலாச்சாரம் மற்றும் உறவுகளிடையேயான எதிர்பார்ப்பு களை பற்றி சொல்கிறது. இந்தத் தொடருக்கு மாதுரி ஷேகர் திரைக்கதை எழுத,ரித்தேஷ் பத்ரா இயக்கியுள்ளார். ஜான் வெல்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் டெலிவிஷனுடன் இணைந்து தயாரித்துள்ளார். 8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
Next Post