தர்ஷன் நடிக்கும் காட்ஸ்ஜில்லா’
மோகன் குரு செல்வா இயக்கத்தில்,தர்ஷன் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்கும்
“காட்ஸ்ஜில்லா” என்ற படத்தின் ஷூட்டிங் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இந்த பூஜையில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு , பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர்கள் விஜய் சசி, பாண்டிராஜ் பலர் கலந்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் தர்ஷன் ஹீரோவாக நடித்த, அலிஷா மிரானி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ரோபோ சங்கர், கேபிஒய்.வினோத், பிளாக் பாண்டி,பிஜிஎஸ் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட், க்ரியேடிவ் என்டர் டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் பிஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படம் புது விதமான கற்பனையுடன் உருவாகும் ஒரு ரோம்-காம் வகையிலானது.