Take a fresh look at your lifestyle.

வாழ்க்கையே ஆன்மீகம்: இளையராஜா

3

வாழ்க்கையே ஆன்மீகம்: இளையராஜா
இசை அமைப்பாளர் இளையராஜா எழுதி இசையமைத்துள்ள பள்ளியெழுச்சி பாவை பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் இளையராஜா பேசியது, இந்த பள்ளி எழுச்சி பாவை பாடல்கள் நான் யோசிச்சு எழுதியது அல்ல. யோசிக்காமலேயே கடகடவென பத்து பாட்டு வந்தது. நான் 1980-ல் இருந்து பவுர்ணமி அன்று மலை சுற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தேன்.1974-ல் நான் முதல் முறையாக மூகாம்பிகை கோவிலுக்கு போகும் போது அந்த மூகாம்பிகை முற்றிலுமாக என்னை ஏற்றுக் கொண்டார். அவர் காட்டிய வழியில் நான் போய் கொண்டிருந்தேன். 6 வருடம் கழிந்தது. 1980ல் மீண்டும் போனேன். மூகாம்பிகை அம்மாவிடம் நான் எதுவுமே கேட்டதில்லை. எல்லாமே அவ கொடுத்தது தான். ஆனால் கூப்பிட்டாள் உடனே வந்து நிற்பாள். 1980-ல் இருந்து கிரிவலம் சென்று வருகிறேன். ஆன்மீகம் என்று ஒன்னு தனியாக இல்லை. வாழ்க்கையே ஆன்மீகம். நீங்க வாழ்றதும் ஆன்மீகம்தான் என்றார்.