Take a fresh look at your lifestyle.

நானும் ஜாலி டைப் தான்: லிஜோ மோல் ஜோஸ்

1

நானும் ஜாலி டைப் தான்: லிஜோ மோல் ஜோஸ்
சசி இயக்கிய ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை லிஜோ மோல் ஜோஸ். அதன் பின் சூர்யாவுடன் ‘ஜெய்பீம்’ படத்தில் செங்கேணி கேரக்டரில் நடித்தார். தொடர்ந்து காதல் என்பது பொதுவுடமை, ஜென்டில் உமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் லிஜோ மோல் ஜோஸ் அளித்த பேட்டியில் கூறியது,நான் அதிகம் பேச விரும்பாதவள். ஆரவாரமாக வாழ விரும்பவில்லை. என் நண்பர்களும் என்னைப் பற்றி இதையே சொல்வார் கள். இதைவைத்து மக்கள் என்னை இறுக்கமானவள் என்றும், ஒதுங்கி இருப்பவர் எனவும் தவறாக புரிந்து கொள்கின்றனர்.மக்களோடு சுதந்திரமாக பேசிக்கொள்ள சிறிது காலம் ஆகும். புதிதாக என்னிடம் பழகுவோருக்கு நான் நட்பாக பழகுபவளாக தெரிவதில் லை. நானும் ஜாலி டைப் தான் என்றார்.