பெரம்பூர் ஹீரோ 2 பேருக்கும் வெற்றி!!
பாரி இளவழகன் இயக்கத்தில் ‘அன்பே டயானா’ படம் 17-ந்தேதி வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம் வெளியானதால் ‘அன்பே டயானா’ படம் தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டு விடும் என்ற நிலையில் படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக 67 தியேட்டர்களில் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. இதை தொடர்ந்து படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பேசிய தயாரிப்பாளர் இரா சரவணன், ஜனநாயகன் படமும் வெற்றி, அன்பே டயானா படமும் வெற்றி. நம்ம முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெரம்பூரை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஹீரோ பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’ படமும் வெற்றி பெற்றது.
இதனால் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்றார்.
Prev Post