எழுத்தாளர்கள் சங்க தலைவராக பதவி ஏற்ற சேரன்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு திரையுலகில் பல எழுத்துச் சாதனைகளைச் செய்த மூத்த உறுப்பினரும், எதிரணியில் தலைவர் வேட்பாளராக தேர்தலைச் சந்தித்தவருமான வி.சி.குகநாதன், தலைமையேற்று, உறுதிமொழியை வாசிக்கச்செய்து, தேர்வுச் சான்றிதழை வழங்கினார்.தேர்தல் அதிகாரி உமாசங்கர் பாபு முன்னிலையில் தலைவராக சேரன், பொதுச் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளராக ஆர்.சுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் பதவியேற்றார்கள். தலைவர் சேரன் அனைவரையும் வரவேற்று சங்கத்தின் நலனுக்காக இணைந்து சிறப்புடன் செயல்படுவோம் என்று உரையாற்றினார்.