ஏழு மொழி படங்களை அறிவித்த ஜீ5
ஜீ5 ஓடிடி தளத்தில் 7 மொழிகளில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய மல்டி லிங்குவல் படைப்புகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காளம் ஆகிய ஏழு மொழிகளில்,மனதை கவரும் கதைகளை வெளியிடுகிறது.
திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், நேரடி விளையாட்டு ஒளிபரப்புகள், ஏஐ தொழில் நுட்பத்தை மையமாகக் கொண்ட கதைகள், அனிமேஷன் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளைஒரே தளத்தில் வழங்க உள்ளது.
இந்தியில் வருண் தவான், பூஜா ஹெக்டே, மௌனி ராய் நடித்த ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை படம்,
தமிழில் அருள் நிதியின் டிமான்டி காலனி 3,
நயன்தாரா, கவின் நடிப்பில் ஹாய் மற்றும் ராவடி ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.




