Take a fresh look at your lifestyle.

இட்லி கடை படம் இயக்கியது ஏன்? மேடையில் ஓப்பனாக பேசிய தனுஷ்

108

இட்லி கடை படம் இயக்கியது ஏன்? மேடையில் ஓப்பனாக பேசிய தனுஷ்
தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் தனுஷ் பேசியது, நான் சின்ன பையனாக இருக்கும் போது எங்கள் ஊரில் ஒரு இட்லி கடை இருக்கும்.அந்த கடையில் சாப்பிட வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் என் கையில் காசு இருக்காது. எங்கள் ஊரில் அதிகாலை யில் பூ பறிக்க செல்வார்கள். எவ்வளவு பூ பறித்து கொடுக்கிறோமோ, அவ்வளவு காசு கொடுப்பார்கள்.நானும் என் அக்காவும் காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து வயலுக்கு சென்று பூ பறிப்போம். 2½ மணி
நேரம் விடாமல் பூ பறித்தால் ஆளுக்கு 2 ரூபாய் கிடைக்கும். அதை எடுத்துக் கொண்டு நேராக அந்த இட்லி கடைக்கு சென்று 2 ரூபாய் கொடுத்து 4 இட்லி வாங்கி சாப்பிடுவோம்.அப்படி உழைத்து சாப்பிடும் போது வரும் நிம்மதியான சுவையும்,
சந்தோஷமும் பெரிய ரெஸ்டாரண்ட்களில் கூட எனக்கு கிடைக்காது.அப்படிதான் இட்லி கடையை வைத்து நாம் ஏன் ஒரு படம் எடுக்கக் கூடாது என்று தோன்றியது. அது
மட்டுமின்றி கிராமத்தில் என் மனதை பாதித்த சில கேரக்டர்களையும் வைத்து
எழுதப்பட்ட கற்பனையான கதைதான் இட்லி கடை என்றார்.