மிராய்- விமர்சனம்
அரிய சக்தியோடு பிறந்துள்ள தேஜா சஜ்ஜா, அது பற்றி தெரியாமல் சுற்றித் திரிகிறார். இந்த நிலையில் அவன் பிறந்த நோக்கத்தை ரித்திகா நாயக் அவருக்கு புரிய வைக்க நினைக்கிறார். மற்றொருபுறம் சக்தி வாய்ந்த சூனியக்காரராக இருக்கும் மஞ்சு மனோஜ் 9 புத்தகங்கள் கிடைத்தால் ஒட்டு மொத்த சக்தியையும் பெற்று உலகத்தை ஆட்சி செய்ய நினைக்கிறார். அவருடைய திட்டத்தை எப்படி தேஜா சஜ்ஜா முறியடித்தார் என்பதுதான் படத்தின் மீதி கதை
ஹனுமான் படத்தின் மூலம் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த தேஜா சஜ்ஜாவின் மிராய் படமும் மிரட்டலாக உள்ளது. இளமை துள்ளலுடன் துருதுருப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஹீரோயின் ரித்திகா நாயக் கொடுத்த வேலையை செய்துள்ளார். வில்லனாக மனோஜ் மஞ்சு மிரட்டலாம் நடிப்பை கொடுத்து உள்ளார். மேலும் ஸ்ரேயா சரண் ஜெகபதி பாபு ஆகியோரும் சிறந்த நடிப்பு தந்துள்ளனர்.
ஃபேண்டஸி படத்தை அதிரடி ஆக்ஷனை கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் கட்டாமானேனி. அதோடு ஒளிப்பதிவு வேலையையும் சிறப்பாக செய்துள்ளார். இசையும் படத்திற்கு பலம்.
Next Post