சினிமா தான் என் கனவு:தேஜூ அஸ்வினி
என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர், தேஜூ அஸ்வினி. தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘பிளாக்மெயில்’ படத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் தேஜூ அஸ்வினி கூறியது, ‘‘நான் சினிமாவுக்கு வந்தது எதிர்பாராத விதமாகத்தான். சினிமா விளம்பரம் சார்ந்த ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்து கொண்டிருந்தபோது, ஒரு குறும்படம் நடித்தேன். அதனைத்தொடர்ந்து மாடலிங் சென்று, இப்போது சினிமாவுக்கு வந்திருக்கிறேன். பொருளாதார சூழலும், என் கனவும் சேர்ந்தது தான் சினிமா பயணம்.இந்த சினிமாதான் என் வாழ்க்கை தரத்தை உயர்த்தியிருக்கிறது.அந்த சினிமாவுக்கு என்றென்றும் உண்மையாக இருப்பேன் என்றார்.
Prev Post
Next Post