Take a fresh look at your lifestyle.

கான்சிட்டி படத்தின் 25வது நாள் விழா

3

கான்சிட்டி படத்தின் 25வது நாள் விழா
அர்ஜுன் தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், பவர் ஹவுஸ் பிக்சர் தயாரிப்பில் உருவான கான்சிட்டி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெறுமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியது, இன்று “கான் சிட்டி” திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றி விழாவில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய காலத்தில், 25 வாரங்கள், 50 வாரங்கள், 100 நாட்கள், 175 நாட்கள் என படங்கள் ஓடி வெற்றி கொண்டாடப்பட்டன. இன்று 25-வது நாள் விழாவாக இருந்தாலும், அந்த மகிழ்ச்சி அதே அளவுக்கு இருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணம் ரசிகர்களும், ஊடக நண்பர்களும் தான். உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்