* சாம் சி எஸ் க்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரம் !
இந்தியாவின் முன்னணி ஓ டி டி படைப்புகளை கௌரவிக்கும் நெக்ஸா இந்தியா ஸ்ட்ரீமிங் அகாடமி அவார்ட்ஸ் விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். ‘சுழல் 2’ வெப் தொடருக்காக ‘பெஸ்ட் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் ரீஜனல் ‘விருதை வென்று, தனது தனித்துவமான இசை மொழிக்காக மீண்டும் ஒருமுறை தேசிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளார்.இந்த விருதுகள் அறிவிப்பில் ‘சுழல் – சீசன் 2’ சீரிஸ் மொத்தம் மூன்று முக்கிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. சிறந்த வெப் தொடர் – சுழல் – 2, சிறந்த பிராந்திய ஒரிஜினல் சவுண்ட்டிராக் – சாம் சி எஸ், சிறந்த கதாநாயகி – ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்றுள்ளது.