இளையராஜா இசையில் ‘தட்டுவண்டி’
சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் படம் ‘தட்டுவண்டி’. இப்படத்தை, 2021ல் 2 மாநில அரசின் விருதுகளை வென்ற ‘பில்டர் கோல்டு’ படத்தை இயக்கிய விஜயபாஸ்கர் இயக்கியுள்ளார்.இதில் சிறுவன் ராகவன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், திலீபன், மேரி பென்சி குளோரியா மற்றும் தங்கதுரை ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது பாடல் பதிவு மற்றும் பின்னணி இசைப் சேர்ப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
Prev Post
Next Post
