Take a fresh look at your lifestyle.

புதிய டிஜிபி யார் ? நிலவும் குழப்பம் !

3

புதிய டிஜிபி யார் ? நிலவும் குழப்பம் !

தமிழ்நாட்டின் காவல்துறைத் தலைவராக எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றும் மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியும் இதுவரை அவர் பொறுப்பேற்கவில்லை.

இதுகுறித்த காரணங்களை விசாரித்தபோது, புதிய டிஜிபிக்கான மூன்று பேர் கொண்ட பட்டியலை இந்திய அரசின் UPSC பணியாளர் தேர்வாணைய உயர்மட்டக் குழு தமிழ்நாடு அரசுக்கு அளித்தும் அந்த மூன்றுபேரில் ஒருவரை இன்னமும் முதலமைச்சர் விஜய் தேர்ந்தெடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படியிருக்கையில் ஒரு ஆங்கிலப் பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர் தமது X பக்கத்தில் வெளியிட்ட பதிவின் அடிப்படையிலேயே செய்திப் பத்திரிகை ஊடகங்கள் தவறுதலாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டதாகச் செய்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அப்படி அரசு ஆணை வெளியிடப்பட்டிருந்தால் இந்நேரம் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையிலிருந்து மகேஷ் குமார் அகர்வால் விடுவிக்கப்பட்டிருப்பார் என்று கூறும் மூத்த பத்திரிகையாளர்கள் முதலமைச்சர் இதுகுறித்து சிந்தித்து வருவதாகக் கூறுகின்றனர்.

இதற்குள் மகேஷ் குமார் அகர்வால் தொடர்பான தவறான சில வதங்கிகளை சிலர் பரப்பி வரும் நிலையில், முதலமைச்சர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வாய்ய்ப்புள்ளதாக தற்போது வெளிவரும் தகவல்கள் கூறுகின்றன.

இரண்டு பேருமே நல்ல அதிகாரிகள் என்று பெயர் பெற்றுள்ள நிலையில் இருவரில் யாரை முதலமைச்சர் அறிவிக்கப்போகிறார் என்பதே தற்போதய காவல்துறை மற்றும் பத்திரிகை ஊடகத்தினரிடையே ஓடிக்கொண்டிருக்கும் ஹாட் டாபிக்