Take a fresh look at your lifestyle.

பரிமளா அண்ட் கோ -விமர்சனம்

2

பரிமளா அண்ட் கோ -விமர்சனம்
ஜெயராம், ஊர்வசி தங்களின் மகள்கள் சஞ்சனா மற்றும் அனந்திகா உடன் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அனந்திகாவுக்கு ரவுடி சாண்டி தொடர்ந்து காதல் தொல்லை கொடுக்கிறார். திடீரென சாண்டி கொலை செய்யப்பட அந்த கொலை வழக்கை விசாரிக்கும் மிஷ்கின் ஜெயராம் குடும்பத்தின் மீது சந்தேகப்படுகி றார். அதன் பின் குடும்பத்துக்குள் ஒருவரை ஒருவர் சந்தேகப்பட உண்மையில் சாண்டி யை கொன்றது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை. ஜெயராம் , ஊர்வசியின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம்.கணவன்,மனைவியாக அனுபவ நடிப்பை தந்துள்ளனர்.மிஷ்கின் தனித்துவமான நடிப்பை கொடுத்துள்ளார். சாண்டி வில்லத்தனம் கலந்த காமெடியில் கலக்கியுள்ளார்.சஞ்சனா,அனந்திகா மற்றும் யோகி பாபு ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.பெண்களுக்கு எதிரான நடக்கும் முக்கியமான சமூக பிரச்சனையை மையமாக வைத்து, அதை சீரியஸாக இல்லாமல் காமெடியாக , சொல்லியுள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். சில இடங்களில் நீளமான காட்சிகள் கதையின் வேகத்தை பாதிக்கின்றன. ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு மற்றும் பாக்ஸன் இசை ரசிக்க வைத்துள்ளது.