Take a fresh look at your lifestyle.

செம் ஹாப்பி மூடில் கயாடு

2

செம் ஹாப்பி மூடில் கயாடு
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள மஞ்சணத்தி படத்தில் ஹீரோயின்களாக பிரியங்கா மோகன், கயாடு லோஹர் நடிக்கவுள்ளனர். மேலும் புதுமுக நடிகை ஒருவரும் நடிக்கவுள்ளார். இந்த கேரக்டருக்கு நடிகை கயாடு லோஹர் பொருத்தமாக இருப்பாரா? இல்லையா? என்கிற சந்தேகத்துடன் ஒரு டெஸ்ட் ஷூட் எடுத்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். அந்த டெஸ்ட் ஷூட்டில் அவரின் நடிப்பைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளார்.இந்த படம் வெளியான பிறகு கயாடுவின் திரைப் பயணத்தில் மறக்க முடியாத படமாக இது இருக்கும் என தெரிவிக்கின்றனர். டிராகன் படத்துக்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் தமிழில் வந்தாலும் எதுவும் உடனடியாக டேக் ஆஃப் ஆகவில்லை. இந்த நிலையில் மாரி செல்வராஜ் படத்தில் கமிட் ஆகி, அதுவும் இயக்குனரிடமிருந்து இப்படி ஒரு பாராட்டு வந்தது அவருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.